Ajith-Kumar
Ajith-Kumar

விஸ்வாசம் தான் அஜித்தின் கடைசி படம்… வெளியான வதந்தியால் கடுப்பான `தல’ படை

விஸ்வாசம்தான் அஜித்தின் கடைசிப் படம், அந்த படத்துக்குப் பின்னர் அரசியலில் தீவிரமாக அவர் ஈடுபடப் போவதாக வெளியான தகவலால் அஜித் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

அமராவதி படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்த அஜித், இன்று ரசிகர்களின் ஆதர்ஷ நாயகனாக உயர்ந்து நிற்கிறார். இயக்குநர் வசந்த் இயக்கிய ஆசை படம் மூலம் அஜித்தை வெற்றிப்பட நாயகனாக தமிழ் திரையுலகம் ஏற்றுக்கொண்டது. பெரிய அளவிலான ரசிகர்கள் பலம் கொண்ட அஜித், எளிமையாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவார். ஏர்போர்ட்டுகளில் தன்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்படும் ரசிகர்களுக்காக முகம் சுளிக்காமல் போஸ் கொடுத்து மகிழ்ச்சியடையச் செய்பவர். ரிசர்வ் டைப்பான அஜித், மீடியா வெளிச்சம் தன் மீது படுவதை விரும்புவதில்லை. இதனால், பொது நிகழ்ச்சிகளிலும், ஏன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட அவர் கலந்துகொள்வது அரிது. அமர்க்களம் படத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஷாலினியைக் காதலித்து கரம்பிடித்த அஜித்துக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர். அஜித் எங்கு சென்றாலும், அவரது குடும்பத்தினர் எங்கு சென்றாலும் அது வைரல்தான்.

அதிகம் படித்தவை:  கார்த்தி, விஷாலுடன் இணைந்த ஆர்யா என்ன படமா இருக்கும் ?

நீண்ட கேரியரைக் கொண்ட அஜித், ஷூட்டிங்கின் போது காயமடைந்த சம்பவங்கள் ஏராளம். அதேபோல், கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்டவைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர். பிடித்தவர்களை மகிழ்விக்க அவர்களுக்கு பிரியாணி சமைத்துப் போடும் பழக்கம் கொண்டவர் அஜித். மேலும், திரையுலகில் பைலட் லைசென்ஸ் வைத்துள்ள ஒரே நடிகர், நம்ம அஜித்குமார் தான். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது. படத்தில் நயன்தாரா அஜித்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார். பைக் மற்றும் கார் ரேஸ்களில் காயங்கள் பல அடைந்தாலும், தன்னம்பிக்கையால் அந்த காயங்களில் இருந்து மீண்டுவந்து சாதித்திருக்கிறார் அஜித். இவர் தற்போது இயக்குநர் சிவா கூட்டணியில் நான்காவதாக விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள். படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் முடிந்த நிலையில், இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகம் படித்தவை:  ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்

இந்தநிலையில், விஸ்வாசம்தான் அஜித் நடிக்கும் கடைசி படம் என பிரபல வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அந்த படத்துக்குப் பின்னர் அஜித், தீவிர அரசியலில் களமிறங்கப் போவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஏற்கனவே நடிகர்கள் பலர் அரசியல் அரிதாரம் பூசி மக்களிடம் அது எடுபடாத நிலையில், தலயும் இந்த முடிவை எடுத்திருக்கிறாரா என ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஆனால், உண்மையில் அஜித் அரசியலில் இறங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். விஸ்வாசம் படத்துக்குப் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாகவும், அடுத்த படத்தில் முன்னணி இயக்குநர் ஒருவருடன் கைகோர்க்க முடிவு செய்திருப்பதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அஜித் அரசியல் இறங்கப் போகிறார் என்ற வதந்தியை நம்பி, அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டாம் எனவும் அஜித்துக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.