News | செய்திகள்
கோலிவுட்டை அதிரவைக்கும் அஜித் ரசிகர்கள்
தமிழகத்தில் அஜித்தின் ரசிகர்கள் பலம் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் எத்தனை தோல்விகள் கொடுத்த போதும் ரசிகர்கள் பலம் குறைந்ததே இல்லை.
இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரண்டே, அவர் புகைப்படம் வரும் போது எல்லாம் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
தற்போது அஜித் ரசிகர் ஒருவர் ஆத்விக்கின் புகைப்படத்தை கையில் டாட்டூவாக வரைந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக ஷேர் ஆகிவருகின்றது. மேலும், அஜித்தின் தீவிர ரசிகர்களை கண்டு திரையுலகமே ஆச்சரியத்தில் தான் உள்ளது.
