திரைவாழ்க்கையில் விருதுக்காக ஆசைப்பட்ட அஜித்.. கடைசி வரைக்கும் கிடைக்கல

தல அஜித்திற்கு பெருமளவில் எந்த ஒரு ஆசையும் கிடையாது. ஏனென்றால் அவர் தன் சொந்த வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் சரி தன்னால் முடிந்த உச்சத்திற்கு சென்றவர். தன் விடா முயற்சி காரணமாக இன்று இந்திய அளவில் பெருமையாகப் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இந்த நிலையில் தல அஜித்திற்கு கடைசி வரை நிறைவேறாத ஆசை ஒன்று உள்ளதாம்.

இதனிடையே தன் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்ட வரலாறு திரைப்படத்தின் பற்றி நடிகர் அஜித் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2006 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் அஜித், அசின், கனிகா உள்ளிட்டோர் நடித்த வரலாறு திரைப்படம் அந்த ஆண்டு 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றி திரைப்படமாக இருந்தது.

வயதான தந்தை, பரதநாட்டியம் ஆடும் நடன கலைஞர், சைக்கோ கதாபாத்திரத்திம் என மூன்று வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் அஜித். முக்கியமாக பரதநாட்டிய கலைஞராக அஜித் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் ஆடிய நடனம் , அவரது நடை, நடிப்பு என அனைவராலும் கவரப்பட்டது. இந்த ஒரு கதாபாத்திரத்தை பார்ப்பதற்காகவே தியேட்டர்களில் ரசிகர்கள் அலைமோதியது.

இந்த கதாபாத்திரத்திற்காக அஜீத் தன்னுடைய உடல் எடையை குறைத்து இரவு, பகல் பாராமல் நடித்துக் கொடுத்தார் என இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்தார். அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தைப் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த கதையை ஏன் என்னிடம் நீங்கள் சொல்லவில்லை என கே எஸ் ரவிக்குமாரிடம் கேள்வி கேட்டாராம்.

இந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க நான் மிகுந்த ஆவலோடு இருந்ததாகவும்,அஜித் வரலாறு திரைப்படத்தில் அருமையாக நடித்துள்ளார் என்று கூறினாராம்.

அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினை அஜித் பெற்ற நிலையில் இத்திரைப்படத்திற்கு தமிழ்நாடு ஸ்டேட் அவார்ட் தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம் அஜித். மேலும் ஸ்டேட் அவார்ட் இப்படத்திற்காக எனக்குக் கிடைக்காதது இன்று வரை நிறைவேறாத ஆசை எனவும் இது குறித்து பல நாள் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்