தல ரசிகர்கள் சமீப காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் கூடிய திரைப்படம்தான் வலிமை இப்படத்தினை பற்றி அப்டேட் அஜித் பிறந்த நாளன்று வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா காரணமாக படக்குழு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதற்கு காரணம் படத்தின் அப்டேட் வெளியிட்டால் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக கொண்டாடுவார்கள். யாரேனும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது மற்ற ரசிகர்களுக்கும் பாதிக்கும் என்பதால் வெளியிடவில்லை.

இருந்தாலும் தல ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர். தல அஜித் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலோ அல்லது ஏர்போர்ட்டிற்கு சென்றாலோ ஏதாவது ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியானால் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
அப்படி இருக்கும்போது அஜித்தின் சிறு வயதில் எடுத்த புகைப்படம் சும்மா இருக்குமா அது சமூகவலைதளத்தில் திக்குமுக்காடி வருகிறது. தல அஜித் வெளியில் வருவதே அரிது அதனால் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அஜித் பற்றி ஏதாவது ஒரு புகைப்படம் கிடைக்குமா என அலசி ஆராய்ந்து வருகின்றனர்.

அப்படி அலசி ஆராயும் போது தல அஜித் சிறுவயதில் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.