Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-valimai-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொப்பையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்பதை விட சிறந்த மனிதர் என பெயர் பெற்றவர் நடிகர் அஜித் தனது ரசிகர்களுக்கு மரியாதை அளிப்பதிலும் சரி, அவர்களுடன் கலந்துரையாடுவதிலும் சரி இவருக்கு நிகர் யாரும் கிடையாது. இவரது ஸ்டைலான நடைக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்கள் தன்னை தேடி வருவதை விட தானே ரசிகர்களை தேடி செல்வதை வழக்கமாகக் கொண்டவர் தான் நடிகர் அஜித். வரிசையில் நின்று வாக்களிப்பதில் இருந்து சத்தமின்றி உதவுவது வரை எதிலும் வித்தியாசமானவர் அஜித். ஒவ்வொரு ரசிகரிடமும் ஜாலியாக பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

அஜித்தின் படங்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு இருந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படம் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் நாங்க வேற மாதிரி எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ajith kumar

ajith kumar

இந்நிலையில் நடிகர் அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் உடல் எடை குறைந்த செம ஸ்லிம்மாக மாறியுள்ளார் நடிகர் அஜித். தனது ரசிகர் ஒருவருடன் அஜித் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

வலிமை படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஸ்லிம்மாக புதிய தோற்றத்தில் காணப்படும் அஜித்தின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடுத்த படத்திற்கான கெட்டப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தல எப்போதுமே அழகுதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top