வலிமை படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ் ஆர்வலர்கள்.. இதோ வந்துட்டாங்க இல்ல

வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். பல்வேறு வகையில் புதிய சாதனைகளை வலிமை பட அப்டேட் நிகழ்த்தி உள்ள நிலையில், முதன் முறையாக படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வலிமை படத்தில் தமிழ் எழுத்துச் சிதைவு நடைபெற்றுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். என்னதான் நாம் தமிழர்கள், தமிழ் எங்கள் மூச்சு எனக் கூறினாலும், ஆங்கில வார்த்தைகள் இல்லாத தமிழை பேசுவதற்கு திணறி வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. பல ஆங்கில வார்த்தைகள் பேச்சு வழக்கு சொல்லாகவே மாறிவிட்டது. அப்படிப்பட்ட சூழலில் தற்போது வலிமை படம் மூலம் தமிழ் எழுத்துச் சிதைவு உருவாகி இருப்பது கவலை அளிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தமிழில் எழுத்துக்களுக்கு தனி தனி வடிவமைப்பு உள்ளது. ஆனால் இப்போது நாம் பயன்படுத்தும் எழுத்துகள் மருவி வந்தது என்பது நாம் அறிந்ததே. கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துகளுக்கும், 80, 90களில் கல்வி பயின்றவர்களின் எழுத்துகளுக்கும், தற்போது நாம் பயன்படுத்தும் எழுத்துகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. வ,ல இதுபோன்ற எழுத்துகள் பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டு எழுத்துகளுக்கும் வளைவு மட்டுமே வித்தியாசம். ஆனால் இரண்டும் இருவேறு எழுத்துகள். இதைத் தான் எழுத்துச் சிதைவு என்று கூறுவார்கள்.

valimai-cinemapettai
valimai-cinemapettai

தற்போது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடைபெற்றிருப்பதும் இதே தான். அந்த போஸ்டரில் ஸ்டைல் என்று நினைத்து வலிமை என்பதற்கு பதிலாக வவிமை என உருவாக்கப்பட்டுள்ளது. ‘ல’-வில் உள்ள வளைவுக்கு பதிலாக ‘வி’ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது.

இதுபோன்று தமிழ் எழுத்து வடிவத்தை சிதைப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்