Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை பாடலுக்கு நடனமாடிய ரன்வீர் சிங் வீடியோ.. ரசிகர்களின் வேற லெவல் எடிட்டிங்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி ஹுமா குரேஷி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டிற்காக காத்திருந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியானது.
மேலும் சமீபத்தில் வலிமை படத்தில் இடம்பெற்ற நாங்க வேற மாரி என தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்களுக்கு ரசிகர்களே புதுவிதமாக ப்ரமோஷன் செய்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது வலிமை படத்தில் வெளியாகியுள்ள நாங்க வேற மாரி பாடலுக்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

valimai-fan-made
ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பத்மாவதி படத்தில் ரன்வீர் சிங் நடனமாடும் வீடியோவிற்கு பின்புறம் வலிமை படத்தின் நாங்க வேற மாரி பாடல் ஒலிக்குமாறு அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. ரசிகர்களின் இந்த குறும்புத் தனமான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
