ஹிந்தியை திணிக்கும் போனி கபூர்.. அஜித் இதற்கு உடந்தையா?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தை போனிகபூர் தயாரித்து உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் கார்த்திகேயா நடித்துள்ளார்.

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பலமுறை தள்ளிப்போனது. இந்நிலையில் பிப்ரவரி 24 ம் தேதி வலிமை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின் மிகப்பெரிய இடைவேளைக்கு பிறகு அஜித் படம் வெளியாகிறது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. வலிமை படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் முதலில் ஹந்திக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகள் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஹிந்தி முதலிடத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமல்லாமல் வலிமை படத்தில் தமிழ் நடிகர் அஜித் நடித்துள்ளார். இப்படத்தின் இயக்குனர் வினோத்தும் தமிழ் பட இயக்குனர். அஜித்குமார் ரசிகர்களும் தமிழில் தான் அதிகம் உள்ளனர். ஆனால் ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளதால் போனிகபூர் தமிழ்நாட்டில் இந்தியைத் தினிக்கிராரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

valimai
valimai

வலிமை படத்தின் வீடியோ ஒன்று வெளியாகிறது என்றால் அஜித்தை ஆலோசிக்காமல் வெளியிட்டு இருக்க முடியாது. இதனால் அஜித்தும் தயாரிப்பாளர் பேச்சைக் கேட்டு இந்திக்கு முன்னுரிமை கொடுக்க ஒத்துக கொண்டுள்ளாரா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர். அஜித்துக்கு அதிக தமிழ் ரசிகர்கள் இருக்கும் நிலையில் போனிகபூர் மீண்டும் இதுபோன்று செய்தால் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் வெளியாவதில் மிகப்பெரிய சர்ச்சை எழ வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்