அஜித்தின் வலிமை படத்தில் உள்ள சீக்ரெட்!

தல அஜித்தின் அடுத்த படம் ‘வலிமை’ என்பதும் அந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருவதும் நாம் அனைவரும் அறிந்தது தான். இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

குடும்பத்தோடு கிறுஸ்துமஸ் கொண்டாடுவதற்காக நடிகர் அஜித் சென்னை திரும்பி இருக்கிறார்.

அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் தான் நடக்க உள்ளது என்கிறார்கள். ஸ்ரீகோகுலம் ஸ்டுடியோவில் இதற்காக பெரிய அளவில் செட் போடப்பட்டுள்ளது.

போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தில் அஜித் ஒரு புதிய தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது; ஒரு ஸ்டைலான மீசையில் அஜித இருக்கும் ரகசியத்தை படக்குழுவினர் குழுவினர் மறைத்து வைத்திருக்கிறார்களாம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படக்குகுழு வலிமை என பெயரை தேர்ந்தெடுக்க காரணம் அஜித்தின் கதாபாத்திரம், ஸ்கிரிப்ட் பொருத்தமாக இருப்பதே காரணமாம். சுத்தமாக ஷேவிங் செய்து அஜித் நேர்த்தியான தோற்றத்தில் இருக்கும் படங்கள் இதற்கு முன்பு பல வெளியாகி உள்ளன, எனவே அஜித்தின் வலிமை படத்திலும் அவருக்கு இரட்டை வேடங்கள் இருக்கலாம் என்கிறார்கள்.

அஜித் மீசையுடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நடிக்க உள்ளதால் இந்தமாதிரியான யூகங்கள் பரவி வருகிறது. வேதாளம் படத்திலும் அஜித் இரட்டை தோற்றத்தை நடத்திருந்தார்.

வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து கொண்டிருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள்.

Leave a Comment