Tamil Cinema News | சினிமா செய்திகள்
என்ன சார் இது ஒரு படம் கூட ஓட மாட்டேங்குது.. அஜித் கூறியது இன்றும் மறக்க முடியாது.. பிரபல நடிகர் ஓபன் டாக்
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகர் என்றாலும் முன்பொரு காலத்தில் சறுக்கல் என்பது அனைவருக்கும் இருந்தது உண்மை தான். அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், தளபதி விஜய் என்ற வரிசையில் தல அஜித் மட்டும் விதிவிலக்கா என்ன.
அவரையும் தமிழ் சினிமா ஒரு புரட்டி போட்டது என்றே கூறலாம், அந்த வகையில் தல அஜித் ஓடாத படங்கள் என்று பார்த்தால் லிஸ்ட் போட்டு கூறலாம். அதில் முக்கியமானவை ஜனா, ராஜா, ஜி, திருப்பதி, பரம சிவன், ஆழ்வார்,ரெட்,அசல் போன்றவை அடங்கும்.
இந்த காலகட்டத்தில் தல அஜித்திற்கு அடுத்தடுத்து படங்கள் ஓடவில்லை என்பதால் மிகுந்த வருத்தத்தில் பிரபல நடிகரான ராஜேஷிடம் குழந்தைபோல் ‘ என்ன சார் எந்த படம் நடிச்சாலும் ஓட மாட்டிக்குது’ என்று புலம்பி உள்ளாராம். இதனை குணச்சித்திர நடிகர் ராஜேஷ் ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பார்.
யானைக்கும் அடி சறுக்கும் இது ஒன்றும் புதிதல்ல என்று அறிவுரை கூறினாராம் ராஜேஷ். எல்லா படங்களும் நடிகர்களுக்கு ஓடும் என்பது கிடையாது கால சூழ்நிலை ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்று அனைத்தும் ஒரு நேர்கோட்டில் அமைந்தால் மட்டுமே சினிமா கைகொடுக்கும்.
இதனால் ரசிகர்களின் ஆதரவு மற்றும் கொண்டாட்டம் குறையவே இல்லை. தல அஜித் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்டபார்வை படத்தின் மூலம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்று விட்டது.
தற்போது சதுரங்க வேட்டை,தீரன் அதிகாரம் ஒன்று,நேர்கொண்ட பார்வை போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் H.வினோத்துடன் இணைந்து வலிமை என்ற மாபெரும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொங்கலுக்கு வரலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
