fbpx
Connect with us

Cinemapettai

தல அஜித் மாஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்.. இந்த முன்னணி நடிகை தான் தங்கச்சியா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல அஜித் மாஸ் படத்தின் தெலுங்கு ரீமேக்.. இந்த முன்னணி நடிகை தான் தங்கச்சியா?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் கூட்டத்திற்கு சொந்தக்காரராக இருக்கும் பெருமைக்குரியவர் தல அஜித். அவருடைய படங்கள் அனைத்தும் தியேட்டரில் தாறுமாறாக ஓடுவது வழக்கம்.

அந்த வகையில 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அதனை தெலுங்கில் ரீமேக் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது.

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தல அஜித் கேரக்டரில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதற்காக மொட்டை அடுத்துள்ள புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

chiranjeevi-ajith-cinemapettai-1

chiranjeevi-ajith-cinemapettai-1

அடுத்த கட்டமாக இந்தப்படத்தில் ஹீரோயினை விட தங்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் முதலில் தங்கையோட கேரக்டரில் யார் நடிக்கப் போகிறார் என்பதை படக்குழு முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நடிகையாக இருந்தாலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தான் லஷ்மி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்தது.

ஆனால் சாய் பல்லவிக்கு, ஹீரோயின் ரோல் கொடுக்காம தங்கச்சி ரோல் கொடுத்து இருக்கீங்களேன்னு கொஞ்சம் வருத்தத்தோடு இந்த படத்துல நடிக்கிறதுக்கு தயங்கி உள்ளார்.

தெலுங்கு குடும்ப ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது சாய்பல்லவி என்பதால் அவருக்கு தங்கை கேரக்டர் கச்சிதமாக இருக்கும்னு படக்குழு சாய்பல்லவியை சமாதானம் செய்து ஒத்துக்கொள்ள வைத்துள்ளனர்.

Continue Reading
To Top