Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் மகன் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா? மாஸ் காட்டும் லேட்டஸ்ட் குட்டி தல ஆத்விக்
தமிழ் சினிமாவை ஆட்டிப் படைக்கக் கூடிய செய்தி என்றால் அது தல, தளபதி பற்றிய செய்திதான். இவர்களின் படங்கள் வெளிவந்தாலும் இவர்களின் குடும்ப புகைப்படங்கள் வெளிவந்தாலும் சமூக வலைதளங்களில் அன்று அதுதான் முதலிடத்தை பிடிக்கும்.
தல அஜித் சில வருடங்களாக எந்த ஒரு படத்தின் புரோமோஷன் மற்றும் எந்த ஒரு பட விழாவிற்கும் கலந்து கொள்வதில்லை என்று கூறலாம். அதனால் ஏக்கம் அடைந்த இவரது ரசிகர்கள் இவரை எப்படி பார்ப்பது என துடிதுடித்து வருகின்றனர்.
ஆனால் அஜித் படத்தின் நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளை தவிர மற்ற எல்லா செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட வேரியோ ஹெலிகாப்டரின் எம்.டி., கிர்ஸ்டன் சோட்னருடன் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அஜித் ரசிகர்கள் உட்பட அனைத்து ரசிகர்களும் அதை கொண்டாட தொடங்கினர். மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அஜித்தின் இரண்டாவது மகனான ஆத்விக் சிறுவயது புகைப்படங்கள் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது மளமளவென வளர்ந்து விட்டார்.
ஷாலினியும் அவரது மகனும் ஆத்விக் ஏதோ ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஹோட்டல் பணியாற்றும் ஒருவர் செல்பி புகைப்படம் கேட்டபோது அதற்கு ஒத்துழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ஒரு கலக்கு கலக்கி கொண்டு வருகிறது.

ajith kumar shalini son aadvik
