fbpx
Connect with us

Cinemapettai

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றிகரமாக முதல் சுற்றை கடந்த தல.! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ

Tamil Cinema News | சினிமா செய்திகள்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றிகரமாக முதல் சுற்றை கடந்த தல.! வைரலாகும் புகைப்படம் மற்றும் வீடியோ

தல அஜித்தை தற்போது தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக இருந்தாலும் அவ்வப்போது கார் பந்தயம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் கூட இவர் பல முறை கார் பந்தயத்தில் கலந்து பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.

அதே போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் ஆளில்லாத விமானம் தயாரிக்கும் தக்க்ஷ குழுவின் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இவர் சமீபகாலமாக துப்பாக்கி சுடும் போட்டியில் பயிற்சி பெற்று வந்த இவர் இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற 45 வது தமிழக ஷூட்டிங் சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டார். அதில் வெற்றிகரமாக முதல் சுற்றில் வெற்றி பெற்ற இவர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்த போட்டியானது வரும் 3 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இதில் இன்னும் சில சுற்றுகளில் வெற்றி பெற்று அஜித் இதில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top