Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-banner

Tamil Cinema News | சினிமா செய்திகள்

துப்பாக்கி சுடுதலில் இந்திய அளவில் தகுதி பெற்ற தல அஜித்.! அடுத்த போட்டி எங்கே தெரியுமா? வைரல் வீடியோ

தல அஜித் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கும், தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர்  என்றே கூறலாம். இவருக்கு கார் ரேசிங், பைக் ரேசிங், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஆளில்லா விமானத்தை பற்றிய பயிற்சி வழங்கியுள்ளார், இதுபோன்ற தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

கோயம்புத்தூரில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ற நடிகர் அஜித் தேசிய அளவில் தகுதி பெற்றார். அடுத்தபடியாக டிசம்பர் மாதம் மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி நடிகர் அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற  விளையாட்டிலும் தனது பங்கினை மிக சிறப்பாக செய்து வருகிறார்  தல அஜித். இது ஊக்குவிக்கும் வண்ணமாக இருப்பது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். அஜித் ரசிகர்கள் கடவுளே என்று கூறி கோஷமிட்டபடி கோயமுத்தூர்  பகுதியை ஸ்தம்பித்து விட்டனர்.

இந்த வெற்றியை அவர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இது மட்டுமல்லாமல் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர இருக்கும் நேர்கொண்ட பார்வை  படத்தின் திருவிழாவை காண்பதற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top