Connect with us

Cinemapettai

வலிமை படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. மரண மாஸா இருக்கே!

valimai-chasing

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை படத்தில் தல அஜித்தின் பெயர் இதுதான்.. மரண மாஸா இருக்கே!

தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடிக்கிறார். அதேபோல் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துக்கொண்டிருக்கிறார்.

வலிமை படத்தில் அஜித் போலீஸாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என பெயர் வைத்துள்ளார்களாம்.

இதற்கு முன்னதாக அஜித் போலீஸாக நடித்த மங்காத்தா படத்தில் விநாயக் மகாதேவ் என்ற பெயரும், என்னை அறிந்தால் படத்தில் சத்தியமூர்த்தி என்ற பெயரும் பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

இப்போது வலிமை படத்தில் வெளியாகியுள்ள பெயரை ரசிகர்கள் இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top