மெகா ஹிட் கொடுத்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்காத அஜித்.. காரணம் என்ன?

பொதுவாக ஒரு இயக்குனருடன் இணைந்து ஒரு ஹீரோ ஹிட் படம் கொடுத்து விட்டால் மீண்டும் அந்த இயக்குனருடன் கூட்டணி அமைப்பார். ஏனெனில் அவர்களின் வெற்றி காம்போ தொடர வேண்டும் என்பதால். உதாரணமாக நடிகர் அஜித் இயக்குனர் சிவா உடன் அடுத்தடுத்து நான்கு படங்கள் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் வினோத்துடன் தொடர்ந்து இரண்டு படங்கள் நடித்துள்ள அஜித் தற்போது மூன்றாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளார். ஆனால் ஆரம்ப காலத்தில் அஜித்திற்கு ஹிட் படம் கொடுத்த ஒரு இயக்குனரை மட்டும் அஜித் தற்போது வரை தவிர்த்து வருகிறாராம்.

நடிகர் அஜித் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார். அதில் மிகவும் முக்கியமான படம் என்றால் ஆசை படம் தான். இயக்குனர் வசந்த் இயக்கத்தில் உருவான இப்படம் அஜித்தின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. அந்த சமயத்தில் படம் நல்ல வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன் பின்னர் அஜித் இயக்குனர் வசந்த் உடன் மீண்டும் கூட்டணி அமைக்கவே இல்லை. தனக்கு ஒரு நல்ல வெற்றி படத்தை வழங்கிய இயக்குனரை அஜித் தவிர்ப்பதன் காரணம் தெரியாமல் அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

அதாவது இயக்குனர்களிலேயே வசந்த் மிகவும் கண்டிப்பான இயக்குனராம். ஒரு சீன் இப்படித்தான் வரவேண்டும் என அவர் நினைத்து விட்டால் எத்தனை டேக் எடுத்தாலும் அவர் நினைத்தது போல் வரும் வரை விடமாட்டாராம்.

பல நேரங்களில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வராம். அதனால் தான் அஜித் அவருடன் மீண்டும் கூட்டணி அமைக்கவில்லை என கூறப்படுகிறது. எது எப்படியோ தொடர்ந்து 3 படத்தை ஒரே இயக்குனருக்கு  கொடுத்து அஜித் தற்போது நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்