அஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி.. தரமான சம்பவம் காத்திருக்கு

தென்னகசினிமாவில் எப்போதும் ரீமேக்கிற்கு பஞ்சம் இருக்காது என்னதான் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள படங்கள் ரிலீஸின் போது மொழி மாற்றம் செய்து டப்பிங்கில் எல்லா மாநிலங்களிலும் வெளியாகினாலும் தனித்தனியாக அவரவர் மொழிகளின் ஆளுமை மிகுந்த ஹீரோக்கள் ரீமேக் செய்வது வழக்கமான ஒன்றாகியுள்ளது.

தளபதி நடித்த கத்தி கைதி-150 என்கிற பெயயரில் சிரஞ்சீவி ரீமேக் செய்து நடித்திருப்பார். தல அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் முதல் படமான வீரம் காட்டமராயுடு என்கிற பெயரில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடித்திருப்பார். அதே போல கடந்த ஆண்டு வெளியான வக்கீல் சாப் திரைப்படம் தமிழில் தல நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக் ஆகும்.

தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தை நாரப்பா என்கிற பெயரில் ரீமேக் செய்து நல்ல வசூலும் வாரப்பட்டது.

இப்படியான சூழலில் தல அஜித் சிவா இணைந்த இரண்டாவது படமான வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறது சிரஞ்சீவி டீம்.

chiranjeevi-ajith-cinemapettai-1
chiranjeevi-ajith-cinemapettai-1

போலோ ஷங்கர் என பெயரிடப்பட்ட இப்படத்தில் லட்சுமி மேனன் கதாப்பாத்திரத்தி்ல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

2015-ல் வெளியான வேதாளம் தமிழ் தெலுங்கு என அனைத்து தென்னக மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்ததோடு மட்டுமல்லாது விமர்சன ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தல லட்சுமி மேனன் உட்பட சூரி கோவை சரளா தம்பி ராமையா என அனைவரின் நடிப்பும் கவனத்திற்கு உள்ளாகி இருக்கும். அதே போல ஒரு நல்ல டீமை உருவாக்கினால் படத்தை தெலுங்கிலும் ஹிட்டடிக்க வைக்கலாம் என்பது திரை விமர்சகர்களின் கருத்து.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்