Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-common-db-released-2-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விருமாண்டி 2 படத்தில் அஜித்.. அடங்காத தல ரசிகர்கள் செய்த போஸ்டர் வைரலோ வைரல்

சக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் உயர்ந்தவர் அஜித்குமார். எந்த ஒரு தவறான பிரதிபலிப்பும் இதுவரை சொல்ல முடியாத அளவிற்கு தன் வாழ்க்கையை நகர்த்தி செல்கிறார். ஆனாலும் இவருக்கு வரும் ஒரே சிக்கல் ரசிகர்கள் செய்யும் சில செயல்கள்தான் ஆனால் அவை அனைத்தும் தவறாக இருக்காது. அஜித் மேல உள்ள ஆசையை அளவுக்கதிகமாக காமிக்கும்போது பிரச்சனைகள் கூடவே வரும்.

கமலஹாசன் தயாரிப்பில் உருவான விருமாண்டி படம் ஜாதிகள் கலந்து வெளியிட்டாலும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால், அதில் அஜித்குமார் நடித்தால், எப்படி இருக்கும் என்பது போன்ற போஸ்டர் ஒன்று ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படத்திற்கு பின் தனது அடுத்த படத்தின் கதைகளை கேட்க ஆரம்பித்துவிட்டார் அஜித் குமார். அந்த படம் விருமாண்டி படத்தின் இரண்டாம் பாகமாக கூட இருக்கலாம் என்பது போன்ற யுகத்தில் ரசிகர்கள் செதுக்கி புகைப்படம்.

ajith-kumar-cinemapettai

ajith-kumar-cinemapettai

ஏற்கனவே தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவாஜியின் கதாபாத்திரத்தில் கமலஹாசனும், கமலஹாசனின் கதாபாத்திரத்தில் அஜீத் குமாரும் நடிக்கப்போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டது.

இதில் எது நடந்தாலும் அந்த நாள் தமிழ்நாடு முழுவதும் திருவிழா கொண்டாட்டம் தான். தற்போது தல அஜித்தின் வலிமை படம் எப்போது வெளிவரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Continue Reading
To Top