தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே ராசிகளின் வரவேற்பால் வெற்றி அடைந்து வருகின்றன.
சமீப காலமாக அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுடன் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் கொரோனா காரணமாக படக்குழுவினர் அது பிறந்த நாளன்று கூட படத்தினைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடவில்லை. அதற்கு காரணம் படத்தின் அப்டேட் வெளியிட்டால் ரசிகர்கள் கூட்டமாக கொண்டாடுவார்கள் என்பதற்காக வெளியிடவில்லை.

தற்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கொரோனா நிதியாக தங்களால் முடிந்த பண உதவியை தமிழக அரசிடம் கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அஜித் தரப்பில் இருந்து 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. தற்போது 2021 கொரோனா நிதியாக 25 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். தற்போது இந்த செய்தி அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.