Tamil Cinema News | சினிமா செய்திகள்
தீனா படத்தை தவறவிட்ட பிரபல நடிகர்.. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அஜித்
2001ஆம் ஆண்டு பொங்கலன்று வெளிவந்து மாஸ் ஹிட்டான படம் தீனா. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார். இவர்களுடன் சேர்ந்து சுரேஷ்கோபி நடித்து, தமிழ் சினிமாவில் கேன்ஸ்டர் மூவிக்கு ஒரு அடித்தளம் போட்டனர் என்றே கூறலாம்.
மாஸான பேக்ரவுண்ட் மியூசிக், தல அஜித் ரவுடி கெட்டப், அஜித் மற்றும் லைலா இணைந்து நடித்திருக்கும் காதல் காட்சிகள் என்று அனைத்திலும் பட்டையை கிளப்பி இருப்பார் ஏ.ஆர்.முருகதாஸ்.
யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார், அனைத்து பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இவ்வளவு பெரிய மாஸான படத்தின் கதையை தளபதி விஜய் நிராகரித்து விட்டாராம்.
ஏ.ஆர்.முருகதாஸ் முதலில் இந்தக்கதையை தளபதி விஜய்யிடம் கூறியதாகவும் அப்போது படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் இந்த படம் தல அஜித்திற்கு கை மாறியதாம். இதற்குப் பின்பு மீண்டும் அஜித் , ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் மிரட்டல் என்ற படம் எடுப்பதாக இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.
தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இன்றளவும் இணையதளத்தில் அடித்துக் கொண்டாலும், இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள் தான்.
மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் நண்பர் அஜித்தைப் போல கோட் சூட் போட்டுள்ளதாக கூறியிருப்பார் அது இணையதளத்தில் வைரலானது. முன்புள்ள காலத்தில் இருந்த போட்டி பொறாமைகள் தற்போது ஒரு துளி கூட இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
