அஜித் குமார், இவரை பொறுத்தவரை என்றுமே இவரின் பலம் ரசிகர்கள் தான். “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும்  செல்லமாக அழைக்கப்படுபவர்.  அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

படம் நடிப்பது என் வேலை, நீங்கள் உங்களுடையதை பாருங்கள் என்று கூறி ரசிகர் மன்றங்களை கலைத்தவர். தெரிந்தும், தெரியாமலும் பல நல்ல காரியங்களை செய்து வருபவர். பல நேரங்களில் இவருக்கு விசுவாசமாக செயல்படும் இவரின் ரசிகர்கள், சில நேரங்களில் இவரை தர்ம சங்கடத்திலும் ஆழ்த்தியுள்ளார். அப்படி ஒரு சம்பவம் தான் தூங்காநகரம் மதுரையில் நடந்துள்ளது.

ajith

அஜித் ஷாலினி தம்பதியின் மூத்த மகள் தான் அனோஷ்கா. இவர் பிறந்த தினம் 3 ஜனவரி 2008 .   அடுத்த வாரம் இந்த குட்டிப்பெண்ணின் பிறந்தநாளை முன்னிட்டு அஜித்தை ரசிகர்கள் அடித்த போஸ்டர் ஒன்றை தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் மகளை மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுடன்   ஒப்பிட்டு  ” எதிர்கால தங்கத்தாரகையே ! வாழ்க பல்லாண்டு ” என்று   இவர்கள் போஸ்ட்டர் அடித்துள்ளனர். அஜித் என்றுமே தன் சினிமா வாழ்க்கை வேறு, குடும்பம் வேறு பர்சனல் என்று இருப்பவர். இந்நிலையில் அஜித்துடன் நின்று விடமால், அவரின் குழந்தைகள் வரை செல்கின்றது ஒரு சிலரின் விசுவாசம்.