fbpx
Connect with us

Cinemapettai

பொன்மகள் வந்தாள் பண்ணிய வேலை.. இதெல்லாம் சரி இல்ல ஜோ.. சூர்யாவுக்கு போன் செய்த தல அஜித்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பொன்மகள் வந்தாள் பண்ணிய வேலை.. இதெல்லாம் சரி இல்ல ஜோ.. சூர்யாவுக்கு போன் செய்த தல அஜித்

நேர்கொண்ட பார்வை படத்திற்கு அடுத்தபடியாக மீண்டும் வினோத், போனிகபூர் கூட்டணியில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். தல அஜித் படக்குழுவினரிடம் தற்போது படப்பிடிப்பு வேண்டாம் என்றும் கொரோனாவின் தாக்கம் குறைந்த பின்னர் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று தெரிவித்து. வீட்டில் அனைத்து படங்களையும் பார்த்து வருகிறாராம் அஜித்.

இந்த நிலையில் பல தடைகளை தாண்டி 2டி என்டர்டெயின்மென்ட், அதாவது சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் பொன்மகள் வந்தாள் OTT-யில் வெளியிடப்பட்டது.

படத்திற்கு அமோக வரவேற்பு பெற்றிருந்தாலும், இன்னொருபுறம் தியேட்டர் ஓனர்களின் வயித்தெரிச்சல் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் படம் வெளிவந்தவுடன் சில நிமிடங்களில் தமிழ் ராக்கர்ஸ் இந்த படத்தை வெளியிட்டு விட்டனர். இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தை பார்த்து பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தல அஜித் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்துவிட்டு அசந்து போய்டாரம் மனுஷன்.உடனே ஜோதிகாவிடம் போனில் வாழ்த்து கூறினாராம்.

அதுமட்டுமில்லாமல் ‘இதெல்லாம் சரி இல்லை ஜோ நேர்கொண்ட பார்வையை மிஞ்சிடீங்க. நடிப்பில் சும்மா பின்னிட்டீங்க எனக்கு படம் ரொம்ப புடிச்சிருக்கு’ என்று கூறினாராம். இயக்குனர் ஃப்ரெட்ரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் சூர்யாவிடமும் இந்த படம் தயாரித்ததற்கு மிக்க சந்தோசம் துணிச்சலான முடிவு என்றாராம்.

படத்தில் குழந்தை கடத்தப்பட்டு, கற்பழிக்கப்படும் சம்பவத்தை மிக அழுத்தமாக இயக்குனர் தெரிவித்திருப்பார். எப்படியாவது நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஜோதிகா படம் முழுக்க போராடுவது தான் கதை.

படத்தின் சுவாரசியத்தை பார்த்து மிரண்டு போன தல அஜித் ஃப்ரெட்ரிக்குடன் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டு இருக்கின்றனர்.

Continue Reading
To Top