உலக சாதனை படைக்க அதிரடியாக களமிறங்கும் அஜித் குமார்.. பின்னி பெடல் எடுக்க போகும் AK

நடிகர் அஜித் எந்த அளவுக்கு பைக் ரேஸ் பிரியர் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். பட விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் அஜித்தை பார்க்கவே முடியாது. ஆனால் சமீபகாலமாக அஜித் பைக் ரேஸ் போன்றவற்றிற்காக வெளியே வருவதைப் பார்க்க முடிகிறது.

ஹெச் வினோத் இயக்கிய நேர்கொண்டபார்வை வெற்றிக்குப் பிறகு இதே கூட்டணியில் நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்தில் பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

வலிமை படத்தின் படபிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்றது. அஜித் படப்பிடிப்பு முடிந்தவுடன், அங்குள்ள பைக் ரேஸர்களுடன் சேர்ந்து சுமார் 5000 கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார். சமீபத்தில் வலிமை படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்தவுடன் நடிகர் அஜித் கடந்த 10 மாதங்களாக இந்தியா முழுவதும் அவரது பைக்கில் சுற்றி வந்துள்ளார்.

சமீபத்தில் அஜித் கரடு முரடான சாலையில் பைக் ஓட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து உயரான மலை உச்சியில் பாறையின் விளிம்பில் நின்று அஜித் எடுத்த புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியானது.

சுற்றுப் பயணத்தின்போது அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. தற்போது அஜித் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மீண்டும் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அஜித்துடன் ஐந்திற்கும் மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ரைடர்களும் செல்ல உள்ளார்கள்.

அஜித் ஓட்டிச் செல்லும் பைக்கானது BMW R 1200 R ஆகும். நடிகர் அஜித் BMW பைக்கில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாராம். படப்பிடிப்பு முடிந்தவுடன் சில நடிகர்கள் ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு செல்வார்கள். ஆனால் அஜித்துக்கு பைக் ரைட் செல்வதுதான் மகிழ்ச்சியாக இருக்குமாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்