Tamil Cinema News | சினிமா செய்திகள்
செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் வைரலாகும் குட்டி தல.. நெடு நெடுன்னு வளந்துட்டாங்களே!
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் படம் வெளிவந்தால் போதும் அன்று திருவிழா என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு இவர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மற்றும் வரவேற்புகள் இருக்கும்.
என்னதான் சினிமா துறையில் நடிகர் அஜித் பணியாற்றி வந்தாலும். அவரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளை திரைப்படங்களிலும் இன்னும் நடிக்க வைக்காமல் வைத்து வருகிறார்.
எந்த ஒரு திரைப்பட விழா நிகழ்ச்சியில் கூட அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்வதில்லை. திரைப்படத்தை தாண்டி அஜித் மற்றும் குடும்பத்தினரை பார்ப்பது மிக அரிது என்று தான் கூற வேண்டும்.
அஜித் குடும்பத்தினர் ஏதாவது குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டும் தான் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கண் பார்வைக்கு வரும்.
அந்த வகையில் நடிகர் அஜித் குடும்பம் மற்றொரு குடும்பத்தினரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ரசிகர்கள் எடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

advik-ajith-shalini
அந்த புகைப்படத்தில் தன் அம்மாவான ஷாலினியுடன் குட்டி தல அஜித் குருதா ஆடை அணிந்து அருகில் நின்றுள்ளார். தற்போது இந்த புகைப்படம் அடங்காத வெள்ளம்போல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

shalini
