வலிமை டிக்கெட்டின் விலை 1000 ரூபாயா? தட்டிக்கேட்க முடியாமல் பின்வாங்கும் AK

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் வரும் பொங்கல் அன்று அதாவது ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் தியேட்டரில் வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்.

ஆனால் கோவையில் உள்ள தியேட்டர் ஓனர்கள் அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அதன்படி அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மட்டும் சுமார் 50 திரையரங்குகளில் வலிமை படம் வெளியாக உள்ளதாம்.

இந்நிலையில் கோவையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க விநியோகஸ்தர்கள் வலிமை படத்தின் ஒரு டிக்கெட் விலை சுமார் 1000 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளார்களாம். அதுமட்டுமல்ல படம் வெளியாவதற்கு முதல் நாளே அதாவது ஜனவரி 12 ஆம் தேதி இரவு சட்டவிரோதமாக நைட் ஷோ ஒளிபரப்பவும் முடிவு செய்துள்ளார்களாம்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோயம்புத்தூர் அஜித் ரசிகர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். குறிப்பிட்ட தொகையை தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியும் அதிக தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்வது அநியாயம் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பொதுவாக ஒரு டாப் நடிகரின் படம் வெளியானால் முதல் நாள் முதல் ஷோ காட்சிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது வழக்கம் தான். ஆனால் இந்த அளவிற்கு அதிக கட்டணம் இதுவரை வசூலித்ததில்லை. நடிகர் அஜித்திற்கு வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர் அதனால் என்ன விலை சொன்னாலும் கேள்வி கேட்காமல் டிக்கெட்ட வாங்கி செல்வார்கள் என திரையரங்க உரிமையாளர்கள் நினைத்து விட்டார்கள் போல.

இப்படி கோடி கோடியாக கொள்ளை அடிக்க நினைக்கும் தியேட்டர்களை எதிர்த்து தல அஜித் கேள்வி கேட்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சிறிதளவு கூட அதை கண்டுகொள்ளாத அஜித் மட்டுமில்லாமல் எந்த ஹீரோவாக இருந்தாலும் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள் என்ற பயத்தில் இந்த விஷயத்தில் ஒதுங்கி விடுவார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்