வலிமை அடுத்த அப்டேட்.. இயக்குனரின் அதிரடி அறிவிப்பு!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் புதிய படம் “வலிமை”. இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியைத்தொடர்ந்து இரண்டாவது முறையாக வினோத்துடன் கைகோர்த்துள்ளார் தல அஜித். ஹீமா குரோஷி நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஜீ மீடியாவுடன் இணைந்து தயாரிக்கிறார் போனி கபூர்.

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி யூடியூப்பில் புதிய சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘நாங்க வேற மாதிரி’ என்ற பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரை பார்க்கும்பொழுது இப்படத்தில் பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பது தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இப்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என பேசி வருகின்றனர். வலிமை படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருவதால் பாடல்களுக்கு கண்டிப்பாக பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இயக்குனர் வெங்கட் பிரபு காரில் வெளியே செல்லும்போது ரசிகர்கள் அவரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு அவர், “வலிமை படத்தின் இரண்டாவது பாடலை யுவன் கம்போஸ் செய்து முடித்துவிட்டார். விரைவில் பாடல் வெளியாகும், என்ஜாய் பண்ணுங்கள்” என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், “மாநாடு” படத்தின் இரண்டாம் பாடலும் ரெடி, விரைவில் வெளியாகும் என அவர் கூறினார். வெங்கட் பிரபு பேசிய அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்