வலிமை படம் தீபாவளி, பொங்கல் பண்டிகை கடந்து இன்னும் வெளியாகாமல் இருப்பது அஜித் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பலமுறை எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து ஏமாற்றத்தை தருகிறார் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.
ஒவ்வொரு முறையும் ரிலீஸ் தேதி அறிவிக்கும்போது இந்த முறையாவது வலிமை படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கும் போது ஏதோ ஒரு காரணத்தினால் வலிமை ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதனால் அஜித்தின் அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் படுத்திக் கொண்டார்கள்.
வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லூக், டிரைலர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் வலிமை படத்தில் ஏகப்பட்ட பைக் ஸ்டண்ட்களும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் விஜயின் பீஸ்ட், சிம்புவின் வெந்து தணிந்த காடு போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாகவே வலிமை படத்தை வெளியிட போனிகபூர் முடிவு செய்துள்ளார்.
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு வலிமை படத்தை பிப்ரவரி 25 வெள்ளிக்கிழமை அல்லது அதற்கு அடுத்த வார வெள்ளிக்கிழமை மார்ச் 4 ஆம் தேதி வலிமை படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த முறையாவது கண்டிப்பாக வலிமை படம் ரிலீஸ் ஆகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்படியே எத்தனை நாள் ரசிகர்களை சீண்டி விட்டு வேடிக்கை பார்க்க போகிறீர்கள். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தால் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.