பரவலாக தற்போது தமிழ் சினிமாவில் அதிகமாக எதிர்பார்க்கக்கூடிய படமாக இருப்பது அஜித்தின் வலிமை திரைப்படம் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் பிரமாண்டமான தயாரிப்பில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு வலிமை படம் தயாராகியிருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் வலிமை படம் குறித்த பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
படத்தின் ட்ரெய்லர், படத்தின் டீசர், படத்தில் அஜீத் குமாரின் லுக் என அஜித்தின் ரசிகர்களை முழுமையாக இந்தப்படம் திருப்திபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக வேண்டிய இந்த வலிமை திரைப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேதி தள்ளி வைக்கப்பட்டு ஜனவரி இறுதியில் ரிலீஸ் ஆகும் இல்லையெனில் பிப்ரவரி முதல் வாரம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்பும் கொரோனா அச்சுறுத்தல் மிக அதிகமாக இருந்ததால் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
படக்குழு அறிவித்ததில் இருந்து அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இந்த படத்தை காண காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை படத்தின் தயாரிப்பாளர் மேற்கொள்வார்.
அதன்படி பார்க்கும்போது சமீபத்தில் இந்திய அளவில் பேசப்பட்ட RRR, புஷ்பா போன்ற படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்கு அந்த படத்தின் புரமோஷன்கள் தான் காரணம். அது போல வலிமை படத்திற்கும் புரமோஷன் செய்யப்பட்டால் அது மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் படம் வெளியாவதால் கண்டிப்பாக இந்த படத்திற்கு பிரமோஷன் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சூப்பர் ஐடியா ஒன்றை கையில் வைத்திருக்கிறார்
அந்த ஐடியா என்னவென்றால் ஒரு பைசா கூட இந்த வலிமை படத்தின் புரமோஷனுக்காக அவர் செலவிட போகவில்லையாம். மாறாக அஜித் ரசிகர்கள் மீது அவர் கொண்ட நம்பிக்கையின் காரணமாக இந்த படம் பற்றிய ஒரு போஸ்டர் வெளியிட்டால் கூட அதை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அளவில் ட்ரண்ட் செய்து விடுகின்றனர் அப்படி இருக்கும்போது வலிமை படத்திற்கென தனியாக புரோமோஷன் தேவையில்லை என்று அவர் முடிவெடுத்திருக்கிறார்.
அஜித்குமார் தென்னிந்தியாவைப் பொருத்தவரை மிக மாஸ் ஆன நடிகர் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும் இருந்தாலும் மற்ற மாநிலங்களில் அவரின் வலிமை படத்திற்காக புரமோஷன் செய்தால் அது படத்தின் வெற்றிக்கு வலுசேர்க்கும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
ஆனால் போனி கபூரின் இந்த ஐடியா அவர் அஜித் ரசிகர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மட்டுமே காட்டுகிறது. அதுமட்டுமின்றி படத்தின் மீதான அவரது நம்பிக்கை தான் இப்படி ஒரு முடிவை அவருக்கு எடுக்க வைத்திருக்கிறது. ரசிகர்கள் வழக்கம் போல நாங்க பாத்துக்குறோம் முருகேசா என்பது போல அஜித் படத்திற்கு புரமோஷன் எதுவும் தேவையில்லை அஜித் நடிக்கிறார் என்பதே மிகப்பெரிய புரமோஷன் என்று கூறி சமூக வலைதளத்தை கலக்கி வருகின்றனர்.