அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் அஜித்குமாரின் நடிப்பை அனைவரும் பாராட்டினர். படத்திற்கு ஏற்றவாறு ஆக்ஷன் த்ரில்லர் என கதைக்களத்தை சிறப்பாக வினோத் வடிவமைத்த்துள்ளதாகவும் அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் படத்தின் தேவையில்லாத எமோஷனல் காட்சிகள் இடம்பெற்றதாகவும் ஒரு சில காட்சிகளை தவிர்த்திருந்தால் நல்லா இருக்கும் என கலவையான விமர்சனங்களை கூறி வந்தனர். ஆனால் படம் வெளியாகி தற்போது வரை வசூல் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்திற்கு பிறகு அஜித் குமார் மீண்டும் வினோத்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்காக தற்போது சென்னையில் மிகப்பெரிய அளவில் செட் ஒன்றை போட்டு வருவதாகவும் கூடிய விரைவில் படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
இப்படத்தை போனிகபூர் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க இருப்பதாகவும். படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்க வேண்டுமெனவும் இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்பு வினோத்துடன் அஜித் குமார் மூன்றாவது முறையாக இணைவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது
வலிமை படத்தில் அஜித்துக்கு தங்கையாக சுனையானா நடித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு அம்மன் படத்தில் அம்மன் தாயாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதன் பிறகு தற்போது வலிமை படத்தில்அஜித்துக்கு தங்கையாக இவர் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர் ஏராளமான படங்களில் நடிப்பார் என பலரும் கூறுகின்றனர்.