தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். ஆனால் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி ஒரு சில ரசிகர்களை பூர்த்தி செய்யாமல் கலையான விமர்சனங்களைப் பெற்றது.
இருப்பினும் வலிமை திரைப்படம் தொடர்ந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறி வருகிறார். அஜித் பொறுத்தவரை எப்போதும் படத்தில் நடிக்கும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் செய்வது வழக்கம் இவ்வாறு இவர் பல படங்களில் நேரடியாகவே சண்டைக்காட்சிகளில் ஈடுபட்டு நடித்துள்ளார்.
வலிமை திரைப்படத்தில் பைக் வீலிங் செய்யும் போது அஜித் குமார் தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ பார்த்த பல ரசிகர்களும் அஜித் குமார் கீழே விழுந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அஜித் குமார் ஒரு பைக் ரேசர் எப்படி கீழே விழுந்தார் என படக்குழுவினரிடம் பலரும் கேட்டு வந்தனர்.
அதற்கு படக்குழுவினர் சாலையில் இருந்த சிறு சிறு கற்களால் தான் அஜித் அவர்கள் பைக் வீலிங் செய்யும் போது தடுமாறி கீழே விழுந்ததாகவும் அவர் போன பைக் ஸ்பீடுக்கு பைக் கண்ட்ரோல் செய்யாமல் கீழே விழுந்தது நல்லதுதான் எனவும் கண்ட்ரோல் செய்ய நினைத்து இருந்தால் கண்டிப்பாக அவர் மேலும் காயங்கள் ஏற்பட்டிருக்கும் என கூறினர். அந்த அளவுக்கு அவர்கள் சுதாரித்துக்கொண்டு பைக் விட்டதாகவும் அதனால்தான் அவருக்கு சிறு சிறு காயங்களுடன் தப்பித்ததாகவும் தெரிவித்தனர்.

தற்போது அஜித் அவர்கள் வலிமை படத்தில் பைக் வீலிங் காட்சி எடுக்கும்போது கீழே விழுந்த புகைப்படம் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு சிகிச்சை கொடுக்க புகைப்படமும் வெளியாகி அதில் காயத்துடன் அஜித் வலி தாங்காமல் இருந்துள்ளார். தற்போது இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.