தல அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகி திரையுலகில் கலக்கியது மட்டுமின்றி 50வது நாள் என்ற மைல்கல்லையும் எட்டியது.

இந்த நிலையில் ‘அஜித் 58’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் யார்? என்பது குறித்த கேள்விகள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா இயக்கவுள்ளதாகவும், ‘வீரம், வேதாளம், விவேகம் படங்களை அடுத்து நான்காவது முறையாக அஜித்துடன் சிவா இணையவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

Siva-and-ajith
Siva-and-ajith

மேலும் இந்த படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இருப்பினும் இந்த படம் ‘விவேகம்’ அளவுக்கு பெரிய பட்ஜெட் படமாக இருக்காது என்றும் இதுவொரு கிராமத்து மற்றும் செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அஜித் நடிக்கும் அடுத்த படமான ‘தல 58’ திரைப்படத்தை இயக்குனர் சிவாவும், விஜய் நடிக்கும் அடுத்த படமான ‘தளபதி 62’ திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும் இயக்கவுள்ளது தெரிந்ததே.

இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ajith

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க இளம் இசையமைப்பாளரான சாம் சிஎஸ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் இசையமைத்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து ஒரே நேரத்தில் தல, தளபதி என இரண்டு பெரிய நடிகர்கள் படங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Ajith-Kumar

ஏற்கனவே இவர் கார்த்திக், கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள Mr.சந்திரமெளலி என்ற படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல, தளபதி நடிக்கும் இரண்டு படங்களிலும் சாம் இசையமைப்பது உறுதியானால் அவர் கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் பட்டியலில் இணைந்துவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.