Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவில் எங்களையும் மனுசனா மதிக்கிறது அஜித், கமல் தான்!
சினிமா என்பது மிகப்பெரிய கனவு தொழிற்சாலை. அதில் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் என்று வெளியில் தெரிவார்கள்.
ஆனால், அந்த கனவு தொழிற்சாலையில் எத்தனையோ பேர்களின், அதுவும் வெளியிலேயே தெரியாத எத்தனையோ பேர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.
சினிமா வில் ரொம்ப முக்கியமானது ஒளிப்பதிவு. அதில் சம்பந்தப்பட்டது லைட்ஸ்மேன்களின் பணி. ஸ்விட்ச் ஆன், ஆப் என்ற இரண்டுக்குள்ளேயே அவர்கள் வாழ்க்கை அடங்கிவிடும்.அவர்கள் சினிமாவுக்குள் இருக்கிறார்கள் என்பதை கூட ஹீரோக்கள் யோசிக்க மாட்டார்கள்.
ஆனாலும் சிலர் ஒப்புக்கு பேசுவார்கள். சிலர் உண்மையிலேயே அக்கறையுடன் பேசுவார்கள். அந்த வரிசையில் கமல், அஜித் , பிரபு நெப்போலியனை லைட்ஸ் மேன்கள் குறிப்பிடுகிறார்கள்.
கமல் டெக்னீஷியனை மதிக்க தெரிந்தவர் என்பதால், அவர்களை மதிப்பாராம். அஜித் உதவி கேட்டால் செய்து தருவாராம்.
