Tamil Cinema News | சினிமா செய்திகள்
வித்தியாசமான கதையில் மீண்டும் இணையும் அஜித் சிறுத்தை சிவா.. தலக்கு இந்த கதை செட்டாகுமா?
தல அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா வலிமை படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தல 61 படத்தை யார் இயக்கப் போகிறது என்ற கேள்வி தற்போது பரபரப்பாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் அஜித் சுதா கொங்கராவிடம் கதை கேட்டதாக செய்திகள் வெளியாகின.
அந்தக் கூட்டணி அமைந்தால் செமையாக இருக்கும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் சிறுத்தை சிவாவுடன் தல அஜித் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
மேலும் இதுவரை தல அஜித் நடிக்காத பீரியட் கதையில் நடிக்க உள்ளதாகவும் மேற்கண்ட செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதனால் ரசிகர்கள் சிறிது அப்செட்டில் உள்ளனர். விஸ்வாசம் என்ற மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருந்தாலும் பீரியட் படம் அஜித்துக்கு செட்டாகுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் கண்டிப்பாக சிறுத்தை சிவா படத்திற்கு இமான் தான் இசையமைப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏற்கனவே விஷ்ணுவர்தன் தல அஜித்தை வைத்து ஹிஸ்டரிக் பிலிம் ஒன்றை எடுக்க ரொம்ப காலமாக காத்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களோ தல ஸ்கிரீனில் வந்தாலே போதும் என்கிறார்கள். விஷ்ணுவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமே தல.!
