ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விவேகம் விஸ்வாசம் லிஸ்டுல புது படம்.. சிறுத்தையோட தல போட போகும் ஆட்டம்

சிறுத்தை சிவா, அஜித் கூட்டணி, பல பேருடைய விருப்ப கூட்டணியாக உள்ளது. இவங்க ஒன்னு சேர்ந்தா வசூல் மழை தான் என்றே சொல்லலாம். வீரம் , வேதாளம் , விவேகம் விஸ்வாசம் என இயக்குநர் சிவா மற்றும் அஜித் குமார் கூட்டணியில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்கள் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றிபெற்றன.

அதே நேரத்தில், வேதாளம் , விவேகம் ஆகிய இரு படங்கள் அஜித் ரசிகர்களால் கொண்டாடபட்டது. இருப்பினும், மற்ற ரசிகர்கள், இந்த படங்களை வச்சு செய்துவிட்டார்கள். அஜித்துக்கு அதிகமான ‘வி ‘யில் தொடங்கி ‘ம்’ இல் முடியும் படங்களை சிறுத்தை சிவா கொடுத்தார். ஆனால் இதுவும் ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியது.

என்னதான், ரசிகர்கள் தலையை விட்டுக்கொடுக்கவில்லை என்றாலும், சிகர்களின் பொறுமையை அதிகபட்சமாக சோதித்த படம் என்றால் அது விவேகம் படம் தான். கடைசியாக வெளியான விஸ்வாசம் படம் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது. ஒரே இயக்குநர் நடிகர் கூட்டணியில் தொடர்ச்சியாக படங்கள் வெளியானதால் ரசிகர்களிடையே ஒரு விதமான சலிப்பு கூட ஏற்பட்டது.

மீண்டும் மீண்டுமா?

சிறுத்தை சிவா அஜித் கூட்டணி இனி வேண்டாம் என்று ரசிகர்கள் விரும்பியபடியால், அஜித் அடுத்ததாக ஹெச். வினோத், மகிழ் திருமேனி, ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்றுகிறார். இந்த நிலையில், சிறுத்தை சிவா கங்குவா திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் ப்ரோமோஷன் காண வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மாபெரும் பட்ஜெட்டில் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகியிருக்கும் கங்குவா வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் சிவாவிடம் கங்குவா படத்திற்கு பிறகு அஜித் உடன் படம் எதிர்பார்க்கலாமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவா ” கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். ஆனால் அதை நான் சொன்னால் நல்லா இருக்காது அஜித் சார் சொன்னால் தான் நல்லா இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

இது ஒரு சில ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், இன்னும் ஒரு சிலருக்கு மீண்டும் மீண்டுமா என்ற சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News