Connect with us
Cinemapettai

Cinemapettai

Ajith-Kumar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எம்.ஐ.டி மாணவர்களுடன் கூட்டணி வைத்த அஜித்… வெளிவந்த புது தகவல்…

ஆளில்லா விமான சோதனை குழுவின் ஆலோசகராக நடிகர் அஜித்தை சென்னை பல்கலைகழகம் நியமித்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ajith

ajith

தமிழ் சினிமா ரசிகர்களின் ஆஸ்தான நாயகன் என்றால் அஜித் தான். அவரின் ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டு பல வருடங்கள் கழிந்தாலும், அவருக்கு இருக்கும் ரசிகர்கள் மட்டும் குறையவே இல்லை. தொடர்பு கொள்ள முடியாத தூரத்தில் இருந்தாலும், தேவையான சமயங்களில் பொதுவெளியில் அவரை காண முடியும் என்பதே உண்மை. நடிகர் சங்கம் கலை விழாவில் கூட நமக்கு கட்டப்படும் கட்டடத்திற்கு ரசிகர்களிடம் ஏன் பணம் வாங்க வேண்டும். நாமே செய்யலாமே என கூறியதாக திரை பிரபலம் ஒருவர் கூறியது வைரல் ஆனது. இந்த குணத்துக்கே அவர் மீது ரசிகர்கள் கொள்ளை கொண்ட பிரியம் வைத்துள்ளனர்.

நடிப்பில் மட்டுமல்லாமல் அஜித்திற்கு ரேஸ்களில் அதிக விருப்பம் உண்டு. ஆனால் அவர் செய்து கொண்ட ஆபரேஷன்களால் அவரால் தொடர்ந்து அதில் கலந்துக்கொள்ள முடியவில்லை. இதனால், தனது ஆர்வத்தை ட்ரோன்களில் திருப்பினார். சமீபத்தில், கூட குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறையின் ஒரு பயிற்சியில் கலந்து கொண்டார்.

Thala

இந்நிலையில், சென்னை பல்கலைகழகம் ஏரோ மாடலிங் துறையில் அஜித்திற்கு ஒரு சிறப்பு பதவியை கொடுத்து இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் செப்டம்பர் மாதம் ஆளில்லா விமானம் குறித்து போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் உருவாக்க இருக்கும் ஆளில்லா விமானத்திற்கு சோதனை விமானியாகவும், மாணவர்களுக்கு ஆலோசகராகவும் சென்னை பல்கலைகழகம் நடிகர் அஜித்தை நியமித்துள்ளது. இதற்கு அவருக்கு சம்பளமாக ஒரு வகுப்புக்கு ரூ.1000 கொடுக்கப்பட இருக்கிறதாம். ஆனால், அதை ஏழை மாணவர்களுக்கு கொடுக்க அஜித் அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top