என்னது நடிகர் சங்க கட்டிடம் கட்டாததற்கு அஜித் காரணமா? இது என்னடா புது உருட்டா இருக்கு

கோலிவுட்டில் நடிகர் சங்கத்திற்கு என சொந்தமாக ஒரு கட்டிடம் கட்ட பல ஆண்டுகளாக திட்டமிட்டு வருகிறார்கள். ஆனால் இன்று வரை அதை செயல்படுத்தியதாக தெரியவில்லை. ஒவ்வொரு முறை தேர்தலில் வெற்றி பெறும் நபர் இந்த முறை நிச்சயம் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என வாக்குறுதி அளிப்பதோடு சரி. அதன் பின்னர் அது அப்படியே கிணற்றில் போட்ட கல் போல அமைதியாக இருக்கும்.

இந்நிலையில் தான் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் அரசியலில் உள்ள ஈடுபாடு காரணமாக நடிகர் சங்க தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். அதுமட்டுமின்றி நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு அந்த மண்டபத்தில் தான் என் திருமணத்தை நடத்துவேன் என சபதமெல்லாம் போட்டார்.

அந்த சபதத்தை நிறைவேற்ற அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் செலிபிரிட்டி கிரிக்கெட். நடிகர்களுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை எற்பாடு செய்த விஷால் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி விடலாம் என கனவிலேயே கட்டிடத்தை கட்ட தொடங்கினார்.

இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்காக டாப் நடிகர்களான விஜய் அஜித் ஆகியோரை விஷால் அழைத்திருந்தார். ஆனால் இவர்கள் இருவருமே இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. ஒருவேளை இவர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிருந்தால் நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் சாட்டிலைட் உரிமைக்கு மட்டும் பல கோடி கிடைத்திருக்கும்.

ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி அந்த சமயத்தில் நடிகர் அஜித், “நாம் ஏன் மக்களிடம் பணம் பெற வேண்டும். நாமே ஒவ்வொருவரும் நமது சம்பளத்தில் கொஞ்சம் பணம் செலுத்தினால் எளிதாக கட்டிடத்தை கட்டி விடலாமே” என கூறினாராம். இதனால் தான் விஷாலின் மொத்த திட்டமும் தரை மட்டமானதாக கூறப்படுகிறது.

Star-Cricket
Star-Cricket

இறுதியில் நடிகர் சங்க கட்டிடம் கட்டாததற்கு அஜித் காரணம் என கூறிவிட்டார்கள். இதில் அஜித் தவறு என்ன இருக்கிறது. அவர் சரியாக தானே கேட்டுள்ளார். நடிகர் சங்க கட்டிடம் கட்ட பொதுமக்களிடம் ஏன் வசூல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நடிகரும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறீர்கள். அதில் கொஞ்ச பணம் கொடுத்தாலே போதும். ஆனா ஏதோ காசுக்கு கஷ்டப்படுவது போல் மக்கள் கிட்ட நிதி கலெக்ட் பண்றது அசிங்கமா இல்லையா என பலர் விமர்சித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்