Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர்களில் அஜித் முறையாக வரி கட்டுகிறார்.! பிரபல அரசியல் தலைவர் பாராட்டு.!

ரஜினி, கேப்டன், கமல், விஜய் என யாரையும் விட்டு வைத்தது இல்லை எல்லோரிடமும் வம்பு இழுத்து கொண்டே தான் இருப்பார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சிக்கும் சினிமா நடிகர்களுக்கும் எப்பொழுதுமே ஏழரை தான். ரஜினி, கேப்டன், கமல், விஜய் என யாரையும் விட்டு வைத்தது இல்லை எல்லோரிடமும் வம்பு இழுத்து கொண்டே தான் இருப்பார்கள்.

காரணம் சினிமாகார்களால் தான் நம் தழிழ்நாடு சீர் கெட்டு விட்டது என்பது அவர்களின் நிலைபாடு. கடந்த ஐந்து வருடங்களில் ஜாதி அரசியல் தவிர்த்து அந்த கட்சி நல்ல பாதையில் போகிறது காரணம் அன்புமணி அவர்களின் தமிழ்மக்கள் மேல் அதீத அக்கரை.

மாநில அரசோ இல்லை மத்திய அரசோ எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் மக்களுக்கு ஏதேனும் தீமை இருக்குமாயின் அதை முதலில் எதிர்த்து அறிக்கை விடுவது ஐயா ராமதாஸ் மட்டுமே.

கூட்டனி கட்சியாக இருந்தலும் கிழித்து தொங்க விட்டு விடுவார். நம் வருங்கால சந்ததிக்கு நன்மை சேர்க்கும் வகையில் கல்வி திட்டங்கள் ஒழுங்குபடுத்த இவர்கள் கட்சி சார்பாக கொடுத்த அறிக்கை ஏறாலம்.

தழிழத்தில் சமச்சீர் கல்வி முறை வருவதற்கு ராமதாஸ் அய்யாவின் விட முயற்சியும் ஒரு காரணம். பல பெண்களில் தாலி அறுக்கவும் இளைஞன் தவரான போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து மதுஒழிப்பதை பல வருடங்கலாக ஒழிக்க போரடாடி வருகிறார் ராமதாஸ் அய்யா.

அவருடைய மகன் அன்புமணி சுகாதார துறை அமைச்சராக இருந்த போது அவரால் கொண்டுவரப்பட்ட 108 இலவச ஆம்பூலன்ஸ் திட்டத்தால் இந்தியாவில் இதுவரை என்னற்ற உயிர்கள் காக்கப்பட்டன.

மேலும் சிகிரெட் மற்றும் பான் மசாலாவில் அதன் எதிர் விளைவுகளை சித்தரிக்கும் விதத்தில் வாசகத்தையும் படத்தையும் இடம் பெற செய்தார்.

மேலும் படக்காட்சியில் புகை மற்றும் குடி சம்மந்தமாக காட்சி இடம் பெற்றால் அதற்கு தீயவிளைவுகளை குறிக்கும் வாசகம் இடம் பெற சட்டம் இயற்றியது அன்புமணிதான்.

இப்படி என்னில் அடங்காத பல இருந்தாலும் இன்று அவர் ஒரு சினிமா நடிகரை பாராட்டியது சினிமா துறையில் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

அவர் வேறு யாரும் இல்லை தல அஜித்தை தான். இன்று நடைப்பெற்ற கூட்டத்தில் கட்சி தொடங்க நினைக்கும் சினிமா நடிகர்கள் யாருமே நல்லவர்கள் கிடையாது.

இவர்களோ நாட்டுக்கு வரி கட்டாம பணத்த பதுக்குறாங்க இவங்க எங்க நாட்ட காப்பாத்த போறாங்கன்னு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் நடிகர்களில் அஜித் ஒருவர் மட்டுமே முறையாக வரியை செலுத்துகிறார் என்றும் கூறியுள்ளார். சினிமா நடிகர்களை எதிர்த்த கட்சியில் ஒரு நடிகன் புகழப்படுவது தல அஜித்துக்கு மட்டுமே சாத்தியம்.

அஜித் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் என்பது இதுவும் ஒரு சான்று.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top