fbpx
Connect with us

Cinemapettai

அஜித்துக்கு ரசிகர்கள் இருந்து பார்த்திருப்பீங்க.. தல அஜித்தே ஒரு இளம் நடிகருக்கு தீவிர ரசிகராம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்துக்கு ரசிகர்கள் இருந்து பார்த்திருப்பீங்க.. தல அஜித்தே ஒரு இளம் நடிகருக்கு தீவிர ரசிகராம்!

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகராக வலம் வருபவர் தல அஜித். சினிமா கேரியரில் அதிக தோல்வி படங்களை கொடுத்தாலும் அதற்கெல்லாம் ஈடுகட்டும் வகையில் தற்போது தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று தல அஜித்தின் சினிமா மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தல அஜித் ஒரு இளம் நடிகரின் தீவிர ரசிகராம்.

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் மகேந்திரன். இவரை தற்போது மாஸ்டர் மகேந்திரன் எனவும் அழைத்து வருகின்றனர்.

அந்த கால கட்டங்களில் மகேந்திரன் நடிக்காத படங்களே கிடையாது. அதிலும் முக்கியமாக கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் படங்களில் அதிகமாக நடித்திருப்பார்.

1998 ஆம் ஆண்டு பாண்டியராஜன் நடிப்பில் கோதண்டராமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கும்பகோணம் கோபாலு. இந்த படத்தில் இருந்து தல அஜித் மாஸ்டர் மகேந்திரன் ரசிகராக மாறி விட்டாராம்.

mahendran-tweet

mahendran-tweet

மாஸ்டர் மகேந்திரன் தல அஜித்துடன் முகவரி எனும் படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மகேந்திரன்.

Continue Reading
To Top