நடிகர் சூரி, கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர். ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர். ஏழ்மையான சாதாரண குடும்பத்தில் பிறந்த நடிகர் சூரி, இன்று தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் காமெடி நடிகர்.Soori

தமிழ் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு வாய்ப்பு கிடைத்து தற்போது சக்சஸாக இருப்பவர் நடிகர் சூரி. தன்னுடைய சினிமா பயணத்தில் தான் தற்போது நல்ல நிலைமையில் இருப்பதால் சூரி பத்திரிக்கையாளரை சந்தித்து நன்றியை தெரிவித்து வருகிறார்.

அப்போது பேசும்போது, நான் ஜி படத்தில் முதன்முதலாக நடித்த போது அஜித்தை திட்டும்படி காட்சி இருந்தது. நான் ஆர்வக்கோளாறில் கொஞ்சம் அதிகமாகவே பேசிவிட்டேன், அந்த காட்சி முடிந்தததும் அவர் என்னை திட்டுவார் என்று நினைத்தேன், ஆனால் என்னை மிகவும் பாராட்டினார்.

சினிமாவில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய முதல் பாராட்டு என்றால் அஜித் அவர்கள் சொன்னது தான் என்றார்.