அழுத்தமான மெசேஜ் சொல்லும் மாஸ் ஹீரோ அஜித்.. சரவெடியாக வெளிவந்த துணிவு எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

வினோத், அஜித் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் இன்று வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்த துணிவு திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கிறது என்பதை முழு விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.

கதைப்படி பிரபலமாக இருக்கும் ஒரு வங்கியை கொள்ளையடிக்க அசிஸ்டன்ட் கமிஷனர் உதவியுடன் திட்டம் போட்டு ஒரு கும்பல் வருகிறது. ஆனால் அவர்களுக்கு முன்பாகவே அந்த வங்கியில் இருக்கும் கேங்ஸ்டரான அஜித் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து கமிஷனரான சமுத்திரகனி தலைமையில் காவல்துறை இந்த பிரச்சனையை கையில் எடுக்கிறது அதன் பிறகு என்ன நடந்தது அஜித் எதற்காக இந்த களத்தில் குதித்தார் என்பது போன்ற பல கேள்விகளுக்கு இப்படம் விடையளிக்கிறது.

Also read: அஜித் மிரட்டும் ஒன் மேன் ஷோ.. துணிவு எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம்

இந்தப் படத்திற்கு முன்பாக இவர்களின் கூட்டணியில் வெளிவந்த வலிமை, நேர் கொண்ட பார்வை ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அதனால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே வினோத் மெனக்கெட்டு திரை கதையை கொண்டு சென்றிருப்பது நன்றாகவே தெரிகிறது. அதேபோல் அவருடைய முயற்சியும் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

அதற்கேற்றவாறு அவர் அஜித்தை பல பரிமாணங்களில் காட்டி ரசிகர்களை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்றிருக்கிறார். மங்காத்தா திரைப்படத்தில் நெகட்டிவ் ரோலில் அசத்தியிருந்த அஜித் பல வருட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறார். அந்த வகையில் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ், சிரிப்பு, ஆட்டம், பாட்டம், ஆக்சன் என ஒவ்வொரு காட்சியிலும் அவரே படத்தை தாங்கி நிற்கிறார்.

Also read: அதிகாலை காட்சிக்கு தடை.. சண்டையால் வாரிசு, துணிவு படத்திற்கு அதிரடி உத்தரவிட்ட அரசு

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை இப்படி ஒரு வேகத்துடன் பார்ப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக அவர் குறித்து வெளிவந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களுக்கும் இந்த துணிவு படம் மரண அடியை கொடுத்து இருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக ஹீரோயின் மஞ்சு வாரியர் வியப்பை ஏற்படுத்துகிறார். பொதுவாக மாஸ் ஹீரோ திரைப்படத்தில் ஹீரோயின்களுக்கு அவ்வளவாக வேலை இருக்காது.

ஆனால் இதில் அஜித்துக்கு நிகராக சண்டை காட்சிகளில் மாஸ் காட்டும் மஞ்சு வாரியர் பல இடங்களில் ஆச்சரியப்படுத்தியுள்ளார். மேலும் படத்தின் வேகம் எதிர்பார்க்காத அளவுக்கு இருப்பது கூடுதல் பலமாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டத்தில் வங்கிகள் அப்பாவி மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க அழுத்தமாக கூறியிருப்பதும் பாராட்ட வைத்துள்ளது.

Also read: கதை மட்டும் தான் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்த ஒரே படம்..2 இடத்தில் ஆஸ்கார் வெல்லப் போவது உறுதி

அது மட்டுமல்லாமல் தேவையில்லாத எந்த காட்சிகளும் இல்லாமல் திரை கதையை கொண்டு சேர்த்திருப்பதும் சிறப்பு. இப்படி படத்தில் பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் ஒவர் ஹீரோயிசம் கொஞ்சம் நெருடலை தருகிறது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஆக்ஷன் சீன் லாஜிக் மீறல். இப்படி சிறு குறை இருந்தாலும் படத்தின் பின்னணி இசை, சண்டை காட்சிகள் ஆகியவை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. ஆக மொத்தம் இந்த பொங்கலுக்கு வெளியான துணிவு ரசிகர்களுக்கு தித்திக்கும் சர்க்கரை பொங்கலாக இருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3.25/5

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்