செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

தனது Race Car & Team -ஐ அறிமுகம் செய்த அஜித்.. கவனிச்சிங்கலா? இதுல இன்னொரு டுவிஸ்ட் இருக்கு

சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் பலரும் வெவ்வேறு தொழில்கள் செய்து கொண்டிருப்பர். ஆனால் ஒருசிலர் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வார்கள்.

ஆனால், அஜித்குமார் வித்தியாசமாக தான் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை கார் ரேஸிலும், புதிய சொகுசு கார்கள் வாங்குவதிலும், வீடு வாங்குவதிலும் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.

இதுதவிர அவர் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற நிறுவனத்தையும் அஜித்குமார் கார் ரேஸிங் என்ற கார் ரேஸிங் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

நினைத்ததை சாதிக்கும் திறம் அதுதான் அஜித்!

நினைத்ததை அடைந்தே தீரும் விடாமுயற்சி குணமும், குட் வைபில் மட்டுமே இருக்கும் அஜித்குமார் தற்போது சினிமாவில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் துபாய் கார் ஆடிட்டோரியம் ரேஸ் கிளப்பில், தன் போர்ஷே ஜிடி 2 கப் காரை டெஸ்ட் டிரைவ் செய்திருந்த அஜித்குமார் அடுத்தாண்டு கார் ரேசிங்கில் பங்கேற்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார்.

இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில், அடுத்தாண்டு கார் ரேஸில் பங்கேற்கப்போகும் அஜித்குமார் தனது காரை அறிமுகம் செய்தும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பல கோடி விலை மதிப்பிலான இந்தக் கார் ரேஸிங் தளத்தில் ஓடுவதற்கு ஏற்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 24ஹெச் சீரிச்ஸ் வகை கார் என்று கூறப்படுகிறது.

அஜித் ரேஸ் காரில் தமிழ் நாடு விளையாட்டு துறையின் லோகோ!

Tamilnadu Sports logo

இதில், அஜித்குமார் கார் ரேஸிங் என்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு துறை லோகோவும் அந்தக் காரில் இடம்பெற்றுள்ளது.

உச்ச நடிகராக இருந்துகொண்டு அரசின் இலட்சியை அவர் தன் சொந்த கார் ரேஸிங்கில் பயன்படுத்தி இருப்பது பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தமிழ் நாடு அரசின் விளையாட்டு சின்னத்தை உலகளவில் கொண்டு செல்ல வேண்டுமெனவும் இளைஞர்களுக்கு உந்துதலாக இருக்கும் வகையில் அவர் இதை வைத்திருப்பதாகவும், புகைப்படங்களிலும் இதை காண்பிக்க சொன்னதாக தகவல் வெளியாகிறது.

கடந்த முறை துபாயில் டெஸ்ட் டிரைவிலேயே, அஜித் மாநில விளையாட்டு சின்னத்தைப் பயன்படுத்தியதற்கு, துணைமுதல்வர் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


- Advertisement -

Trending News