Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-old

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் படத்தில் அஜித் அறிமுகப்படுத்திய டாப் நாயகிகள்

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைத்து வருகிறார்கள். என்னதான் அஜித்திற்கு பொதுவெளியில் பேசுவது பிடிக்காது என்றாலும் அவரை பற்றி பேச ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் கூட அஜித் ரசிகர் என சொல்லி கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்பட்ட தல தன் படத்தில் பல நாயகிகளை அறிமுகம் செய்து இருக்கிறார். அவர்கள் குறித்த டாப் லிஸ்ட் உங்களுக்காக,

சுவலட்சுமி (ஆசை)

1995 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்தவர் சுவலட்சுமி. இதுவே இவருக்கு முதல் படமாக அமைந்தது. இப்படம் 1995 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது.

Ajith-Suvalakshmi

பூஜா (கல்லூரி வாசல்)

பவித்ரன் இயக்கத்தில் வெளியான படம் கல்லூரி வாசல். இப்படத்தில் அஜித்துடன் இன்னொரு நாயகனாக பிரசாந்த் நடித்து இருந்தார். இப்படத்தில் அஜித்துக்கு நாயகியாக அறிமுகமானவர் பூஜா.

தேவயாணி (காதல் கோட்டை)

1996 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காதல் கோட்டை. கடிதத்திலேயே காதலிக்கும் காதலர்களை பின்னணியாக கொண்ட கதை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயாணி இப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தை அகத்தியன் இயக்கி இருந்தார்.

இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மிகவும் அழகாக நடித்திருப்பார்.

ஜோதிகா (வாலி)

1999ம் ஆண்டு வெளியான வாலி படத்தை இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். படத்தில் நாயகனாக அஜித்தும், நாயகியாக சிம்ரனும் நடித்திருந்தனர். அஜித்தின் கற்பனை காதலியாக அறிமுகமானவர் ஜோதிகா. அங்கு தொடங்கிய அவர் திரைப்பயணம் சமீபத்தில் வெளியான நாச்சியார் படம் வரை வெற்றிகரமாக செல்கிறது.

ஜோதிகா ஒரு சில காட்சிகளே வந்தாலும் மிக சிறப்பாக நடித்திருப்பார்.

மாளவிகா (உன்னை தேடி)

சுந்தர் .சி இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார் நடித்துள்ளார். புதுமுக நடிகையாக மாளவிகா கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

மானு (காதல் மன்னன்)

அஜித்துக்குள்ளும் ஒரு சாக்லேட் பாய் இருக்கிறார் என்பதை வெளிக்கொண்டு வந்த படம் காதல் மன்னன். இன்று வரை இப்படத்தின் பல பாடல்கள் சூப்பர் ஹிட் பட்டியலில் இருக்கிறது. சரண் இயக்கிய இப்படத்தில் நடிகையாக மானு அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு மானு தமிழ் சினிமாவில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

சங்கவி (அமராவதி)

அமராவதி 1993-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இப்படத்தில் தான் அஜித் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இதே படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் சங்கவி. இயக்குநர் செல்வா இயக்கிய இந்த படத்திற்கு பால பாரதி இசை அமைத்திருந்தார்.

இப்பட்டியலில் அஜித் நடிப்பில் அறிமுகமான ஹிட் படங்களின் நாயகிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top