fbpx
Connect with us

அஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய மெர்சல்..!

Vivegam-Mersal

News | செய்திகள்

அஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடிக்க தவறிய மெர்சல்..!

தளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் இதுவரை எந்த திரைப்படமும் சந்திக்காத பல தடைகளை கடந்து நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த நிலையில் நேற்று காலை இந்த படத்தின் சென்சார் சான்றிதழும் உறுதி செய்யப்பட்டது.

mersal

தற்போது சென்சார் சான்றிதழின் காப்பி சமூக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்த படத்தின் ‘கட்’டுகள் போக சரியான ரன்னிங் டைம் தெரியவந்துள்ளது.

இந்த படம் 170 நிமிடங்கள் மற்றும் 8 வினாடிகள் ஓடுகிறது. அதாவது 2 மணி நேரம் 50 நிமிடங்கள் 8 வினாடிகள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும்.

அதிரடி சரவெடியாக விஜய்யின் மெர்சல் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் தளபதியை கொண்டாடி வருகின்றனர். 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

mersal

ஆனால் கேரளாவில் இப்படம் விவேகம் படம் வெளியானதை விட குறைவான திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இதோ அந்த விவரம்

பாகுபலி 2 – 320
விவேகம்- 309
கபாலி- 306
மெர்சல்- 290

விவேகம் படத்தை விட 19 அரங்குகள் குறைவாக உள்ள நிலையில் விவேகம் படத்தின் கேரள முதல் நாள் வசூல் சாதனையை மெர்சல் முறியடிக்க வாய்ப்புகள் இல்லை என்கிறது பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top