Tamil Cinema News | சினிமா செய்திகள்
2019-ல் தல அஜித் கட்டிய வரிப்பணம் எவ்வளவு தெரியுமா?
2019 பொங்கலுக்கு பேட்ட படத்துடன் போட்டியாக களமிறங்கிய விஸ்வாசம் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, அதிக அளவிலான வருமானத்தை ஈட்டியது. மெல்லமெல்ல பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட் கெத்தா இடம்பிடிப்பது என்றே கூறலாம்.
அதே வருடத்தில் வெளியான அஜித்தின் அடுத்த படமான நேர்கொண்டபார்வை பெண்களின் உரிமைகளை வெளிப்படுத்தும் விதமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் தல அஜித்திற்கு பெண்கள் மத்தியில் தனி அந்தஸ்தும் மரியாதையும் கிடைக்கிறது.
தல அஜித் இந்த இரண்டு படங்களிலும் பெற்ற சம்பளத்திற்கு வருமான வரியாக கட்டிய தொகை 18 கோடியே 50 லட்சமாம். அஜித் சினிமா உலகில் நேர்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே கூறலாம், அந்த வகையில் வரிப் பணம் கட்டிய பின் தான் தனக்கான சம்பளத்தை எடுத்துக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை தாண்டி மக்களுக்கு அவரை பிடிப்பதற்கான முக்கியமான காரணம் அவருடைய நேர்மை, நெருங்கி இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து சந்தோஷப்படுவது. தனக்கு முன்னதாக நடத்த வருமான வரி சோதனைக்கு பின் தான் தொலைத்த பொருட்கள் கிடைத்துவிட்டதாக நக்கலாக கூறியிருப்பதுதான் ஞாபகத்துக்கு வருகிறது.
தற்போது சிறுத்தை சிவா தயாரிப்பில் வலிமை இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
