அஜித்தின் வேதாளம் படத்தில் நடிச்சு என்ன புண்ணியம்.. சோத்துக்கு வழி இல்லையே என புலம்பும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் என்னதான் பிரபல நடிகராக இருந்தாலும் சில நடிகர்களுக்கு நேரம் சரியில்லை என்றால் அரசனாக இருந்தாலும் ஆண்டி ஆகிவிடுவான் என்ற பழமொழி பொருந்தி விடும். அப்படி ஒன்றுதான் அஜித் பட நடிகருக்கு நடந்துள்ளது.

கிட்டதட்ட பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னதாகவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்துக் கொண்டவர் தான் பிரபல நடிகர் அப்புகுட்டி. சுசீந்திரன் இயக்கிய பல படங்களில் பிரதான காமெடி நடிகராக வலம்வந்தார்.

உயரம் குறைவாக கொஞ்சம் பருத்த உடலுடன் இருக்கும் இவர் காமெடிக்கு சரியான நடிகர் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் சுசீந்திரன் அழகர்சாமியின் குதிரை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மாற்றி அழகு பார்த்தார்.

முதலுக்கு மோசம் இல்லை என்கிற அளவுக்கு அந்த படம் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு காமெடி நடிகராக தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை.

அஜித் நடித்த வீரம் படத்தில் அப்பு குட்டிக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அஜித்தின் ஃபேவரைட் நடிகராக மாறிவிட்டார். அதனை தொடர்ந்து அப்பு குட்டியை வைத்து சொந்த காசில் போட்டோ ஷூட் செய்து பட வாய்ப்புகளுக்கு இந்த புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கூறினார் தல.

இவ்வளவு ஏன் அதனைத் தொடர்ந்து வேதாளம் படத்திலும் வாய்ப்புக் கொடுத்தார். ஆனால் அதை எல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாத அப்புக்குட்டி தற்போது சோற்றுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இத்தனைக்கும் நீண்ட வருடமாக படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை எனவும், இந்த கொரானா சூழ்நிலையில் மேலும் நிதி சிக்கலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

ajith-appukutty-cinemapettai
ajith-appukutty-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்