தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் நடிகர் தான் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படமான வலிமை விரைவில் வெளியாக உள்ளது.
ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளைக் கொடுத்துக் கொண்டிருந்த அஜித்தின் சினிமா கேரியரை மாற்றிய திரைப்படங்களில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.
3 கதாபாத்திரங்களில் பட்டையைக் கிளப்பிய அஜீத்தின் வரலாறு படம் என்றும் தல ரசிகர்களுக்கு ஃபேவரிட் தான். அதிலும் அவர் திருநங்கை கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்காக அஜித் எடுத்த ரிஸ்க் அனைவரையும் மிரள வைத்தது.
பல நடிகர்கள் நடிக்க தயங்கும் அந்த கதாபாத்திரத்தில் தைரியமாக முதலில் நடித்தவர் அஜித் தான். அதன் பிறகுதான் காஞ்சனா படத்தில் சரத்குமார் நடித்தார். இந்நிலையில் அஜித்தின் வரலாறு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் கனிகா.
இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். கேரள வரவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கனிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறுவதற்குள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணமான பல நடிகைகள் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வரவுள்ளார் கனிகா. தொடர்ந்து வாய்ப்புகளை தக்கவைப்பதற்காக தற்போது 38 வயதில் நீச்சல் உடை புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
