Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜீத்துடன் மோத சிக்ஸ்பேக் வைக்கும் வலிமை வில்லன்.. தமிழ் சினிமாவையே மிரட்ட போகும் பிரமாண்ட சண்டைக் காட்சி
தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
தல அஜித் மட்டும் தான் வலிமை படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் ஹீரோயின் யார், வில்லன் யார் என்ற தகவல்கள் பெரும்பாலும் அரசல்புரசலாக ரசிகர்களுக்கு சென்றடைந்தது. இருந்தாலும் இன்னும் அதில் உறுதி இல்லை.
தற்போது கிடைத்த தகவலின்படி தல அஜித்துடன் காலா பட நடிகை ஹீமா குரேஷி நடித்து வருவதாக செய்திகள் கிடைத்துள்ளது. இதைவிட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தல அஜித்துக்கு வில்லன் யார் என்பதுதான்.
வலிமை படத்தில் தல அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க உள்ளாராம். அதிகாரப்பூர்வ தகவல் வெளி வரவில்லை என்றாலும் வலிமை படத்திற்காக பல விஷயங்களை சத்தமில்லாமல் செய்து வருகிறாராம் கார்த்திகேயா. அதில் ஒன்றுதான் அஜித்துக்கு வில்லனாக நடிக்க சிக்ஸ்பேக் வைத்து வருகிறார்.
அஜித்துடன் பிரமாண்ட சண்டைக் காட்சியும் ஒன்று அதிரடியாக உருவாக உள்ளதாம். பெரும்பாலும் அந்த காட்சி வெளிநாட்டில் ஷூட் செய்ய உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத பிரமாண்ட சண்டைக் காட்சியாக இருக்கும் எனவும் செய்திகள் கசிந்துள்ளன.

karthikeya-valimai
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
