எப்போதுமே தல அஜித் தன்னுடைய பட விவகார முடிவில் தெளிவாக இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாட்டையே உலுக்கிய கந்துவட்டி கோஷ்டியிடம் சிக்குவதை நினைத்துதான் கோலிவுட் வட்டாரமே கவலையில் உள்ளது. எல்லாம் என்ன ஆகப்போகிறதோ என்ற பீதி தான்.
அஜித்தின் சமீபத்திய படங்களை தொடர்ந்து பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் தொடர்ந்து அஜித்தின் படங்களுக்கு பாலிவுட்டில் இருந்துதான் பண சப்ளை நடந்து கொண்டிருக்கிறது. அதைவிட அஜித்துக்கும் போனி கபூருக்கும் இடையில் நல்ல நட்புறவு இருப்பதால் எந்த ஒரு சிக்கலில் சிக்க வைக்க மாட்டார் என நம்பி வேலை செய்துகொண்டிருக்கிறார் அஜித்.
அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு மீண்டும் மூன்றாவது முறையாக அவருக்கே தல 61 படத்தை தயாரிக்க வாய்ப்பு கொடுக்கலாம் என சமீபகாலமாக அஜித் யோசனை செய்து கொண்டுள்ளார். இதை அவருடைய வட்டாரத்திலும் தெரிவித்துவிட்டாராம். ஆனால் தற்போது அஜித்தையே ஷாக்காக்கும் விதமாக வலிமை படத்தின் தமிழ்நாடு உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு தூக்கி கொடுத்து விட்டார் போனி கபூர்.

கோபுரம் ஃபிலிம்ஸ் என்ற பெயரைக் கேட்டாலே கோலிவுட் சினிமாவே அஞ்சி நடுங்கும். அன்புச்செழியனை ஞாபகம் இருக்கிறதா. தமிழ் சினிமாவுக்கே பைனான்ஸ் அவர்தான். சரியான நேரத்தில் வட்டி கொடுக்கவில்லை என்றால் ஹீரோ ஹீரோயினை ஜட்டியோடு நிற்க வைத்து மிரட்டி வாங்கும் அளவுக்கு கொடூரக்காரர் என பல செய்திகள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதில் எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.
இந்நிலையில் வலிமை படத்தின் விநியோக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் வாங்கியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருவேளை வலிமை படம் நினைத்த அளவு வசூல் செய்யவில்லை என்றால் அஜித்தின் நிலைமை என்ன ஆகும் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.
இவ்வளவு ஏன், சமீபத்தில் வெளியான விஜய்யின் பிகில் படத்திற்கு கூட பைனான்சியர் இவர்தான். அந்த சமயத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு விட்டு ஏமாற்றி பதுக்கிய பல கோடிகளை அள்ளினார்கள் என்பதும் ஞாபகத்திற்கு வந்து போக வேண்டுமல்லவா. தல அஜித்துக்கு தெரிந்து இது நடந்ததா, அல்லது பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு அஜித்துக்கு தெரிவித்தார்களா என்பது தெரியவில்லை. இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் தான் தயாரிக்கப் போவதாகவும் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.