Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் தள்ளிப்போகும் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு.. காரணத்தை கேட்டு டென்ஷனான தல!
நேர்கொண்ட பார்வை என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு தல அஜித் மற்றும் வினோத் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம்தான் வலிமை.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு அப்படியே நேரெதிராக உருவாகும் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கும் என்கிறது பட வட்டாரம்.
இதற்காக ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு சேசிங் சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம் வினோத். சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் சென்னையில் தொடங்கின.
ஏற்கனவே படப்பிடிப்புகள் தள்ளிச் சென்ற நிலையில் தற்போது பாதிக்கிணறு தாண்டிய நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறது வலிமை.

valimai-cinemapettai
தற்போது தல அஜீத் படப்பிடிப்பிற்கு வருகிறேன் என கூறிய நிலையில் மற்ற நடிகர்கள் படப்பிடிப்பிற்கு வர தயங்குகிறார்களாம். அதற்கு காரணம் கொரானாதான்.
அஜித் முதலில் கொரானா தாக்கம் முடிந்து அதற்கான மாற்று மருந்து கிடைக்கும் வரை படப்பிடிப்பை நடத்த வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில் அஜீத்தே பாதுகாப்பு உபகரணங்களை வைத்து படப்பிடிப்பிற்கு வர முடிவு செய்த நிலையில், மற்ற நடிகர்கள் பின்வாங்கியது அஜித்துக்கு கொஞ்சம் அப்செட் தான்.
காரணம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் வலிமை படப்பிடிப்பு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பாதி படம் மட்டுமே முடிவடைந்த நிலையில் இன்னும் பாதி படம் அப்படியே இருப்பதுதான்.
