Tamil Cinema News | சினிமா செய்திகள்
வலிமை படத்தில் இந்த வாட்டி அஜித் பைக் ஓட்டவில்லையாம்.. என்ன ஓட்ட போகிறார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக வினோத்துடன், தல அஜித் கைகோர்த்து வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார்.
வலிமை படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவிக் கொண்டே இருக்கின்றன. அதற்கு காரணம் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களின் மூலம் வினோத் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கி வருவதால் தான்.
தல அஜித் சமீபகாலமாக மாஸ் கமர்சியல் படங்களில் நடித்து வருவதால் இந்த சேஞ்ச் அவருக்கு ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை தல அஜித் எவ்வளவு போலீஸ் கதையில் நடித்திருந்தாலும் வலிமை அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என வலிமை படக் குழுவில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளனர். வழக்கமாக தல அஜித் படத்தில் காணப்படும் பைக் ரேஸ், கார் ரேஸ் போன்ற காட்சிகள் இந்த படத்தில் இருந்தாலும் வேறு ஒரு வாகனத்தை ஓட்டும் விதமாகவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாம்.
தல அஜித் வலிமை படத்தில் பஸ் சேசிங் காட்சிகளில் நடித்துள்ளாராம். ஒரு பேங்க் ராபரி நடக்கும் இடத்தில் கொள்ளைகாரர்களை பஸ்ஸில் துரத்திச் செல்வது போல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாம்.
